இறுதிப்பயணத்தில்…
த. கிருபாகரன்
முன்னாள் அத்தியட்சகர்,
அரச முதியோர் இல்லம்,
கைதடி
அறுபது வயதினைத் தொட்டவர்களின் உள்ளக்கிடக்கைகளின் வெளிப்பாடாக உறங்கிக் கிடந்த துன்பவியல் நிகழ்வுகளுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் – இந்த “இறுதிப்பயணத்தில்…” என்ற தொடர் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டு உறவுகளினாலும், சமூக உறவுகளினாலும் தூரமாகிப் போன உள்ளங்களுக்குக் கைகொடுத்த இந்த அரச முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள், வாழ்ந்து முடித்த போது பெற்ற அனுபவங்களை, சமூகத்திற்காக விட்டுச்சென்ற செய்திகளைத் தூறல்களாக்கி, அதில் இதமான சிந்தனையை மிதமாக விட்ட நிகழ்வுகள் ஒவ்வொரு கதையிலும் புரையோடிப் போயுள்ளது என்பது வெள்ளிடை மலையாகும்.
முதியோரின் நெஞ்சங்கள் இசைத்த முகாரி இராகங்கள், சிந்தனைக்கு விருந்தாக இங்கே படைக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவிதக் கற்பனையும் கலப்படமும் செய்யப்படவில்லை. உண்மைகள் நேரிடையாகத் தரிசிக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. முதியவர்கள் வீட்டில் அல்லது அல்லது சமூகத்தில் வைத்தே உறவுகளினால் பராமரிக்கப்பட வேண்டும். முதியோர் இல்லங்களில் எவ்வளவு வசதிகளை ஏற்படுத்தினாலும் இறுதியில் உறவுகளை எண்ணி மரணப்படுக்கையில் ஆத்மாக்கள் அழுகின்றன என்ற செய்திகள் பாரமாகி ஈரமாகிப் போயுள்ளன.
இந்த உண்மைகளை நாகரிகத்தின் தூண்கள் என மார்தட்டிக்கொள்ளும் மனித இனம் மனுநீதியின் படி சிந்திக்க வேண்டும். முதியவர்கள் கதைப்பதற்காகவே ஏங்குகின்றார்கள். இதற்கு நேரமில்லாமல் போனதால்தான் பிரச்சினைகள் வரிசையாகிவிட்டன. அத்தோடு முதுமை என்பது புதுமை அல்ல; அது அனைவருக்கும் சொந்தமானது என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாகும். சவால்கள் நிறைந்த முதியோர் பராமரிப்பை வினைத்திறனாக்க இந்தப் பயணிப்புக்கள் துணையாக நிற்கும்.
கண்களில் தொக்கி நின்ற ஏக்கங்கள் ஏராளமாக செறிவாகிக் காணப்பட்டன. முதுமையின் முகவரிகள் மூடுபனியாகிக் காணப்பட்டன. சில்லறைகளாகிக் காணப்பட்ட வேதனைகள் எல்லாம் சேர்வையாக்கப்படுகின்றன. அரச முதியோர் இல்லத்தின் ஒலிபெருக்கிகள் பிரச்சாரத்துக்குத் தயாராகிக் கொள்கின்றன. வழமைபோன்று முதியோர்களின் ஒன்று கூடலுக்கு தயார்ப்படுத்தல்கள் இறுதிக்கட்டத்தில் நின்று கொண்டிருந்தன. முதியவர்களின் எண்ணக் குமுறல்களுக்கு விடை காண்பதற்கான நிகழ்ச்சி நிரல்கள் என்முன் எழுந்து நின்றன. முதுமையின் அனுபவப் பகிர்வுகளாக புதிய களம் ஒன்று அமைக்கப்பட்டது. நீண்ட காலங்களாக கவலைகளை விரட்ட முடியாமல் போய்விட்டதனாலோ என்னவோ […] தென்னந்தோப்பில் ரீங்காரமிட்டபடி சிறகடித்துக் கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் மேலும் கீழுமாகப் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன. காற்றின் சலசலப்பில் தென்னம் ஓலைகள் கைகலப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. ‘சில்’ என்ற தென்றல் இதமாகப் பிறப்பெடுத்துக் கொண்டது. இயற்கையின் இரசிப்புக்களை இரசித்துக்கொண்டிருந்த என் எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளியாக்கியபடி வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு பெண்ணின் வரவு அமைந்தது. ஆக்ரோசமான வார்த்தைகள் என் முன்னால் உருண்டு விழுந்தன. “எனது அப்பாவையும் அம்மாவையும் யார் இஞ்ச விட்டது? எங்கே அவர்கள்?” அவரது வேகமான வார்த்தைகள் சிந்தி சின்னாபின்னமாகிச் […]
பயணம் – 02
பயணம் – 01