நான் மிகப்பெரும் வெற்றியை பெறுவேன் – டிரம்ப்-

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தனது இறுதி பிரச்சாரப்பேரணியில் தான் மிகப்பெரும் வெற்றியை பெறுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள அதேவேளை உங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறுவதற்கு தயாராகுங்கள் என ஜோ பிடென் டிரம்பிற்கு தெரிவித்துள்ளார்.

மிச்சிக்கனில் தனது இறுதி பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப் அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரும் வெற்றியை பெறுவேன் என தெரிவித்துள்ளார்.
ஜோ பிடென் மிச்சிகனிலும் தேசிய அளவிலும் முன்னிலையில் உள்ளார் என்ற கருத்துக்கணிப்புகளை டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
தனக்கு திரண்டிருந்த ஆதரவாளர்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது மிச்சிக்கனில் தோற்கப்போகும் வேட்பாளருக்கான மக்கள் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளார்.
இரண்டாவதாக வரப்போகின்றவருக்கான மக்கள் ஆதரவு இதுவல்ல என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜோ பிடென் பாரிய நிறுவனங்களால் தொழில்நுட்பங்களால் வாங்கப்பட்டுள்ளார்.பாரிய ஊடகநிறுவனங்களும் உள்நோக்கம் கொண்டவர்களும் அவரை வாங்கியுள்ளனர் அவர் வெல்லப்போவதில்லை அவர் வெல்வார் என நான் நம்பவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது இறுதி பிரச்சாரத்தில் உரையாற்றியுள்ள ஜோ பிடென்  டொனால்ட் டிரம்ப் தனது பொருட்களை அடுக்கிக்கொண்டு வெளியேறவேண்டிய தருணம் வந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!