இரண்டு நாட்களில் சசிகலா விடுதலை
‘இரண்டு நாட்களில், சசிகலா விடுதலை தொடர்பான தகவல் வெளியாகும்,” என அவரது வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் கூறினார்.
அவர் கூறியதாவது:
“கர்நாடகாவில், தசரா பண்டிகை கொண்டாட்டத்திற்காக, நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, நாளை நீதிமன்றத்தில் இருந்து ஏதாவது தகவல் வரும். சசிகலா கட்ட வேண்டிய, அபராத தொகையை செலுத்துமாறு, கடிதம் வாயிலாக தெரிவிப்பர்.
நாங்கள் உடனடியாக, நீதிமன்றத்தில் பணத்தை செலுத்த ஏற்பாடு செய்வோம். இரண்டு நாட்களில், சசிகலா விடுதலை தொடர்பான தகவல் வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம்” – இவ்வாறு, அவர் கூறினார்.