கொரோனாத் தொற்றாளர் தொகை ஆயிரத்தைத் தாண்டியது

“கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றி வந்தவேளை கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 190 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.”

– இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 190 ஊழியர்களே தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய இதுவரையில் கொரோனாத் தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஆயிரத்து 21 ஊழியர்களுக்குத் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

அத்துடன் கொரோனாத் தொற்றுக்குள்ளான பெண்ணின் 16 வயது மகளும் ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!