ட்ரம்ப்பின் உடல்நிலை சீராக உள்ளது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ குழு தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பாதித்த டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ட்ரம்பின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வரும் மருத்துவர்கள், அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானது என்று கூறினர். ட்ரம்பின் உடல் நிலை குறித்த வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் கொடி கட்டி பறக்கின்றன.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருத்துவக் குழு கூறியதாவது:-
அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது டோஸை முடித்துவிட்டார், மேலும் அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகள் சீராக உள்ளது.
அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர். மேலும் இரத்த ஆக்ஸிஜன் அளவு வீழ்ச்சியடைந்தாக டிரம்ப் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை காலை முதல் காய்ச்சல் இல்லாமல் அவரது உடல் நிலை இயல்பாக இருப்பதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.