பண்ணை வீட்டில் இன்று எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம்

எஸ்.பி.பி.,யின் உடல் இன்று, சென்னை அருகே, தாமரைப்பாக்கத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல், நேற்று மாலை, அவரது நுங்கம்பாக்கம் இல்லத்தில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டு, இசை மழை வழங்கியவருக்கு, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.எஸ்.பி.பி.,யின் உடல், நேற்று இரவு, திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று காலை, 11:௦௦ மணிக்கு, பண்ணை வீட்டின் ஒரு பகுதியில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!