முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் பயணிக்க கட்டுப்பாடு

முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள்கள் நாளை முதல் இடது பக்கத்தில் உள்ள பேருந்து முன்னுரிமை ஒழுங்கினூடாக மாத்திரமே பயணிக்க முடியும் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இன்று (15) இராஜகிரியவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் மாறி மாறி பயணிப்பதால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குத் தீர்வாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த ஒழுங்கில் பயணிக்கும் பேருந்துகள் நிறுத்தப்பட்டால் பொறுமையாக நிறுத்தி பயணிக்குமாறும் அதனால் சிறு தாமதம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!