டைனோசர் காலத்தைச் சேர்ந்த ஆமை கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டைனோசர் காலத்திய அரியவகை ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் உயிரியலாளர்கள் அழிந்து வரும் ‘டைனோசர்’ காலத்திய ஆமையை கைப்பற்றியுள்ளனர்.இவ்வகை ஆமை அதன் இனங்களிலேயே மிகப் பெரியது.

டைனோசர்கள் காலத்தில் உடன் வாழ்ந்ததாக கருதப்படும் கடல் ஆமை அழிந்து கொண்டே வருகின்றது . இந்த வகை ஆமை இனங்கள் டைனசோர் காலத்தில் இருந்து வாழ்ந்த எச்சம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

வியாபார நோக்கத்திற்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும் இந்த ஆமைகள் மனிதர்களால் அழிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டைனோசர் இனத்தை சேர்ந்த அரியவகை ஆமை ஒன்றை கண்டு பிடித்துள்ளார்கள்.

இந்த ஆமையின் புகைப்படங்களை புளோரிடா உயிரியலாளர்கள் தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ஆமையை பிடித்து புகைப்படம் மற்றும் அதன் முக்கிய புள்ளி விவரங்களை பெற்றுக்கொண்டு மீண்டும் அதனை ஆற்றிலேயே விட்டுவிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!