’19’ நீக்கப்பட்டால் ஜனநாயகம் நாசம் – ரஞ்சித் மத்தும பண்டார

“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கும் செயற்பாடானது நாட்டின் ஜனநாயகத்தை மீண்டும் நாசமாக்கும் செயற்பாடாகவே அமையும்.”
- இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்த காரணிகள் தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஆனால், 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது என்பது நாட்டின் ஜனநாயகத்துக்கு விழும் மரண அடியாகவே அமையும்” என்றும் அந்த அறிக்கையில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.