விஷாலின் நிறுவனத்தில் மோசடி
விஷாலுக்குச் சொந்தமான நிறுவனத்தில் மோசடி செய்ததாக கூறப்படும் பெண் கணக்காளர் ரம்யாவுக்கு முன்பிணை மறுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் ரூ.45 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா மீது சமீபத்தில் புகாரளிக்கப்பட்டது.
இந்தப் புகாரை அடுத்து அலுவலக ஊழியர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய விருகம்பாக்கம் பொலிஸ், பெண் கணக்காளர் ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்பிணை கோரி ரம்யா மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்பிணை மறுக்கப்பட்டதால் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.