பனிப்பாறைக்கிடையில் 1966-ஆம் ஆண்டின் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு

பிரான்ஸ் நாட்டின் சாமோனிக்சில் உள்ள ரிசாட்டில் இருந்து சுமார் 1350 மீற்றர் உயரத்தில் லா காபேன் டு கெர்ரோ எனற் ரெஸ்டாரன்ட்-ஐ நடத்தி வருபவர் திமோத்தீ மோட்டின் இவர் அந்த பகுதியில் நடந்து செல்லும்போது பனிப்பாறை உருகிய நிலையில், பாறைக்கு இடையில் இருந்து இந்திய செய்தித்தாள்களை கண்டுபிடித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு, எக்னாமிக் டைம்ஸ், தி ஹிந்து போன்ற இந்தியாவின் செய்தித்தாள்களை அப்பகுதியில் இருந்து எடுத்துள்ளார். மேலும், ஹெரால்டு செய்தித்தாளில் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்திரா காந்தி 1966- ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதை குறிப்பிடும் வகையில் அந்த தலைப்பு உள்ளது.
இதனால் 1966- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24- ஆம் திகதி இந்தியாவுக்கு சொந்தமான விமானம் அப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 177 பேரும் உயிரிழந்தனர். அந்த விமானத்தில் இந்த பத்திரிகைகள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
செய்தித்தாள்களை கண்டெடுத்த மோட்டின் கூறுகையில்,
‘‘நாங்கள் அந்த பத்திரிகைகளை உலர்த்தி கொண்டிருக்கிறோம். ஆனால், அவைகள் நல்ல நிலையில்தான் உள்ளன. நீங்கள் அதில் உள்ள எழுத்துக்களை வாசிக்கலாம். நான் எனது நண்பர்களுடன் ஒவ்வொரு முறையில் அந்த பனிப்பாறையில் நடந்து செல்லும்போது, நொறுங்கிய விமானத்தின் ஒவ்வொரு பொருட்களையும் கண்டெடுத்துள்ளோம்’’என்றார்.
அதேஇடத்தில் 1950-ஆம் ஆண்டு மலபார் பிரின்சஸ் என்ற விமானமும் விபத்துக்குள்ளாகியிருந்தது குறி்ப்பிடத்தக்கது.