ஜனாதிபதி தேர்தலில் கடந்த முறையை விட பாரிய வெற்றியைப் பெறமுடியும் ட்ரம்ப் நம்பிக்கை !

நவம்பர் 4, 2020

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித்  தேர்தலானது நேற்றைய தினம் நடைபெற்றது.

இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடனும் களமிறங்கியுள்ளனர்.

இந் நிலையில் வாக்குகளை  எண்ணும் பணியானது  நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் கென்டக்கியில்  ட்ரம்ப் மிகப்பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றியடைந்ததாகவும் ஜோர்ஜியா , தெற்கு கரோலினா, இன்டியானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் விர்ஜினியா, வெர்மன்ட்டில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. புளோரிடாவில் இரு தரப்பிலும் கடும் இழுபறி காணப்படுகிறது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்  அடுத்த நான்கு ஆண்டுகளும் சிறப்பாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதே போன்று ஜோ பைடனும் வெற்றி தங்களுக்கே என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனாவை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்காவின் நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்த உள்ளதாகவும் ஜோ பிடன் உறுதியளித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!