நயன்தாராவின் அடுத்த திரைப்படம் எது தெரியுமா?

நவம்பர் 3, 2020

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும்  நயன்தாரா தமிழில் பெரும்பாலான படங்களில் நடித்து வந்தாலும் தனது தாய்மொழியான மலையாளத்திலும் அவ்வப்போது திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டும்  ‘லவ் ஆக்சன் டிராமா’ என்ற மலையாளத் திரைப் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் தற்போது மேலும் ஒரு மலையாள படத்தில் அவர் நடித்து வருகிறார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இத் திரைப் படத்தில் குஞ்சாக்கோ போபன் என்பவர் நாயகனாக நடித்து வருகிறார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் தற்போது  குறித்த திரைப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இத் திரைப் படத்திற்கு ’நிழல்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற எடிட்டர் அப்பு என் பட்டாதிரி என்பவர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நயன்தாரா தற்போது ‘அண்ணத்த’, ‘நெற்றிக்கண்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!