22 ஆவது மரணத்துக்கு கொரோனா காரணம் அல்ல

நவம்பர் 3, 2020

  பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த  கடந்த 31 ஆம் திகதி 27 வயதுடைய நபரின் மரணத்தை கொரோனா மரணமாக கருத்திற் கொள்ளாமல் இருக்க தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தீர்மானித்துள்ளது.

தற்கொலை செய்துக் கொண்ட  இளைஞனுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும்,  மரணம் கொவிட் 19 வைரஸினால் ஏற்படாத காரணத்தால் இளைஞனின் மரணத்தை கொவிட் மரணங்களின் எண்ணிக்கையுடன் சேர்க்காமல் இருக்க தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தீர்மானித்துள்ளது.

  இளைஞனுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 என்று தொற்று நோய் விஞ்ஞான பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில்  அதனை கொரோனா மரணமாக ஏற்றுக் கொள்ளப்படாத காரணத்தால், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 21 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!