பொம்பியோ தங்கிய ஹோட்டலில் இருவருக்குக் கொரோனா வைரஸ் – ஹரின் பெர்னாண்டோ

நவம்பர் 3, 2020

கடந்த வாரம் இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் பணியாற்றிய இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளார் சந்திப்பில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

இந்த விடயம் ஒருவருக்கும் தெரியாத வகையில் மறைக்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மந்திரிக்கப்பட்ட பிரித் நீரை கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக ஆற்றில் இட்டுவரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதனை நிறுத்திவிட்டு முதலில் அவர் பதவி விலக வேண்டும் எனவும் ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!