கட்டுநாயக்க – பியகம தொழில் பேட்டையில் 423 பேருக்கு கொரோனா

அக்டோபர் 31, 2020

 

கட்டுநாயக்க – பியகம தொழில் பேட்டையில் 423 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டாளர் சபையினால் நிர்வகிக்கப்படும் தொழில் பேட்டைகளில் இதுவரை 423 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில் 411 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும், ஏனைய 12 பேரும் பியகம தொழில் பேட்டையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சஞ்ஜய மொஹொட்டிடால இதனை தெரிவித்துள்ளார்.

´இந்த மாதம் 8 திகதி முதல் 28 ஆம் திகதி வரையான 20 நாட்களில் முதலீட்டாளர் சபையினால் நிர்வகிக்கப்படும் தொழில் பேட்டைகளில் 16,527 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

அவற்றில் இன்னும் 495 பரிசோதனை முடிவுகள் கிடைக்கவுள்ளன. இதுவரை 423 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பொருளாதார வலயத்தில் 411 பேரும், பியகம வலயத்தில் 12 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக 12 பொருளாதார வலயங்களில் எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை´.

முதலீட்டாளர் சபையின் கீழ் நாடு முழுவதும் 1615 தொழில் பேட்டைகள் உள்ளன. 25 மாவட்டங்களிலும் உள்ள தொழில் பேட்டைகளில் 6 இலட்சம் பேர் தொழில் புரிகின்றனர். இவர்கள் 70 வீதமான பங்களிப்பை நாட்டின் ஏற்றுமதிக்கு வழங்குகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!