அசுர வேகத்தில் கொரோனா 10 ஆயிரத்தைத் தாண்டியது மொத்தப் பாதிப்பு

அக்டோபர் 31, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

நேற்று மட்டும் 633 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தலில் இருந்தவர்களும், சமூகத்தில் இருந்தவர்களுமே தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 424 ஆக உயர்வடைந்துள்ளது.

6 ஆயிரத்து 123 தொற்றாளர்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 ஆயிரத்து 282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!