82 கிலோ கஞ்சாவுடன் காரைநகரில் படகு மீட்பு

அக்டோபர் 30, 2020


யாழ். காரைநகரில் கடல் மார்க்கமாகக் கடத்தி வரப்பட்ட 82 கிலோகிராம் கேரளாக் கஞ்சாவையும் படகு ஒன்றையும் மீட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.

நேற்றிரவு காரைநகரில் உள்ள கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றைத் துரத்திச் சென்றபோது, படகில் சென்றவர்கள் வேகமாகப் படகைச் செலுத்திச் சென்று காரைநகர் கசூரினா கடற்கரையில் படகை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அப்படகில் கடற்படையினர் சோதனையிட்டபோது, 82 கிலோகிராம் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படகும், மீட்கப்பட்ட கஞ்சாவும் காரைநகர் கடற்படைத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!