ஹைதராபாத் அணி வெற்றி

அக்டோபர் 28, 2020

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது.

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். தொடரின் நேற்றைய 47வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. 

நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லி அணி கப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய  ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் அடித்தது.. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக விருத்திமான் சகா 87(45) ஓட்டங்களும், கேப்டன் டேவிட் வார்னர் 66(34) ஓட்டங்களும், மணீஷ் பாண்டே 44(31) ஓட்டங்களும் எடுத்தனர். 

பின்னர் 220  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய ரஹானே மற்றும் ஷிகார் தவான் ஜோடியில், தவான் (0) ஓட்டம் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 5(6) ஓட்டங்களும், ஹெட்மயர் 16(13) ஓட்டங்களும், ரஹானே 26(19) ஓட்டங்களும், கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 7(12) ஓட்டங்களும், அக்‌ஷர் படேல் 1(4) ஒரு ஓட்டமும், ரபாடா 3(7) ஓட்டங்களும்,, நிதானமாக ஆடிய ரிஷாப் பாண்ட் 36(35) ஓட்டங்களும், ஆர்.அஸ்வின் 7(5) ஓட்டங்களும், நாடராஜ் 1(3) ஒரு ஓட்டமும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தேஷ் பாண்டே 20(9) ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் டெல்லி அணி 19 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 3 விக்கெட்டுகளும், நடராஜன், சந்திப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹொல்டர், நதீம் , விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி கப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!