பிபா தலைவர் கியானிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

அக்டோபர் 28, 2020

சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் கியானி இன்பேன்டினோ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகள் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.  அந்த வகையில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பின் (பிபா) தலைவர் கியானி இன்பேன்டினோ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இதுபற்றி அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில், 50 வயதுடைய இன்பேன்டினோவுக்கு லேசான கொரோனா பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன.  அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து உடனடியாக அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.  தொடர்ந்து 10 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்திடுவார் என்று தெரிவித்து உள்ளது.

பிபா தலைவருடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் கேட்டு கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!