பொம்பியோவுக்குப் பாதுகாப்பு வழங்க இலங்கைக்கு வந்தது அமெரிக்கப் படை

அக்டோபர் 24, 2020

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அவர் சந்தித்த பின், ஊடக சந்திப்பொன்றையும் கொழும்பில் நடத்தவுள்ளார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தயார்படுத்தலை செய்வதற்காக அமெரிக்க உயர் அதிகாரிகள் குழுவொன்று நேற்று கொழும்பை வந்தடைந்துள்ளது.

16 பேர் கொண்ட அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கட்டார் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, இந்தக் குழுவினரது விஜயத்தின்போது, சாதாரண சுகாதார விதிமுறைகளே பின்பற்றப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் அவர்களுக்கு விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!