அரவிந்த் குமாரை கூட்டணியிலிருந்து இடைநிறுத்த ஏகமனதாக முடிவு

அக்டோபர் 24, 2020

  தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழு, பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமாரை கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்த தனது முடிவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டு உறுதிப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது கூட்டணி அங்கத்துவத்தை முழுமையாக நீக்கும் முடிவை அரசியல் குழுவும், சட்ட நடவடிக்கையை கூட்டணி பங்காளி கட்சி மலையக மக்கள் முன்னணியும் எடுக்கும். இதற்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புகளையும் பங்காளி கட்சிகள் வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய கூட்டத்தில், கூட்டணியின் பிரதி தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம், ராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார் மற்றும் பொதுசெயலாளர் சத்திரா சாப்டர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!