மடகாஸ்கர் தீவில் திறக்கப்பட்ட இந்து கோவில்

அக்டோபர் 18, 2020

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மடகாஸ்கர் தீவில் இந்து கோவில் ஹால் ஒன்று திறக்கப்பட்டு உள்ளது.

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மிக பெரிய தீவு மடகாஸ்கர்.  இதில் 2.6 கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.  அவர்களில் 20 ஆயிரம் பேர் இந்திய வம்சாவளியினர்.  அவர்களில் பலர் குஜராத் மாநில மக்கள் ஆவர்.

கடந்த 18ம் நூற்றாண்டில் இந்திய பெருங்கடல் வழியே சிறிய படகுகளில் வர்த்தகத்திற்காக குஜராத்தில் இருந்து மக்கள் சென்றுள்ளனர்.  பின்னர் அதிலிருந்து, மடகாஸ்கரின் வர்த்தக மேம்பாட்டிற்காகவும், இந்தியா மற்றும் மடகாஸ்கரின் முன்னேற்றத்திற்காகவும் அவர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மடகாஸ்கர் தீவின் தலைநகர் அந்தனனாரிவோவில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒரு பெரிய இந்து கோவில் ஹால் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஒரு பெரிய இந்து கோவில் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.  அடுத்த 3 முதல் 4 மாதங்களில் இதன் கட்டுமான பணி நிறைவடைந்து விடும் என கூறப்படுகிறது.  அந்த பணி முடிவடைந்து விட்டால், மடகாஸ்கர் தீவின் அந்தனனாரிவோ நகரில் கட்டப்பட்ட முதல் இந்து கோவில் என்ற பெருமையை பெறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!