துணிவு இருந்தால் நீதிமன்றில் சரணடைய வேண்டும் ரிஷாத் – அமைச்சர் மஹிந்தானந்த

அக்டோபர் 18, 2020

 “அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் ஆதரவு அரசுக்குத் தேவையில்லை. அரசு அவரின் ஆதரவைப் பெற முயற்சிக்கவும் இல்லை. தான் குற்றமற்றவர் என்ற துணிவு ரிஷாத்துக்கு இருந்தால் முதலில் அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.”

– இவ்வாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரிஷாத் பதியுதீனின் ஆதரவு இல்லாமலே 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கு உள்ளது.

ரிஷாத் பதியுதீன் தான் கைதுசெய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டுமாயின் முதலில் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். தான் குற்றமற்றவர் என்பதை அங்குதான் அவர் நிரூபிக்க வேண்டும்.

தற்போதைய அரசில் உள்ளவர்களை முன்னைய அரசு இலக்கு வைத்தபோது அவர்கள் ஓடி ஒளியாமல் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்தார்கள். எனவே, ரிஷாத் பதியுதீனும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

அவர் அமைச்சராகப் பணிபுரிந்த வேளை செய்த பல குற்றங்கள் உள்ளன. அவருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை சுமத்த நாமும் தயாராக இருக்கின்றோம்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!