விஜயதாஸவின் பாதுகாப்பு திடீரெனக் குறைப்பு

அக்டோபர் 18, 2020

 அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவின் பாதுகாப்பு திடீரெனக் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு 5 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எனினும், தற்போது 2 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 அரசால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக விஜயதாஸ ராஜபக்ஸவும் கடும் எதிர்ப்பைப் பொது இடங்களில் தெரிவித்து வருகின்ற நிலையில் அவரின் பாதுகாப்பு திடீரெனக் குறைக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!