மஹிந்தவின் பாதுகாப்பு குழுவிற்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கிய இந்தியாவின் சிறப்பு கொமாண்டோ

அக்டோபர் 17, 2020

இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் “பிளக் கெட் கொமாண்டோ” என்று அழைக்கப்படும், பயங்கரவாத தடுப்பு பிரிவான என்.எஸ்.ஜி படையினர் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக தெரிவுசெய்யப்பட்ட குழு ஒன்றுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.

இந்த தகவலை பி.டி.ஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இந்திய என்.எஸ்.ஜியின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எஸ்.தேஸ்வால் இந்த தகவலை படையின் 36வது ஆண்டு நிறைவு நிகழ்வின்போது தெரிவித்துள்ளார்.

தமது படையினால் இலங்கையின் பிரதமரின் பாதுகாப்புக்காக 21 பேர் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்திய பிரதமருக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளதாகவும் தேஸ்வால் தெரிவித்துள்ளார். எனினும் எப்போது இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

பிளக் கெட் கொமாண்டோ படைப்பிரிவினர் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள், பணயக்கைதிகளை மீட்டல் உட்பட்ட நடவடிக்கைகளை தம்வசம் பொறுப்பேற்றுக்கொண்டனர்.பிளக் கெட் படையினர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சித் சிங், உத்தரபிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யாநந்த், மற்றும் ஜம்மு காஸ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா ஆகியோரின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!