ஷூமாக்கரின் சாதனையை சமன் செய்தார், ஹமில்டன்

அக்டோபர் 12, 2020

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11-வது சுற்று போட்டி இபெல் கிராண்ட்பிரி என்ற பெயரில் ஜெர்மனியில் நேற்று நடந்தது.

இதில் 308.617 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 35 நிமிடம் 49.641 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார்.

பார்முலா1 கார்பந்தய வரலாற்றில் இது அவரது 91-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்த போட்டியில் அதிக வெற்றிகளை குவித்தவரான ஜெர்மனி முன்னாள் வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் (91 வெற்றி) சாதனையை சமன் செய்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!