பெங்களூருவை தோற்கடித்து வெற்றி பெற்றது டெல்லி

அக்டோபர் 6, 2020

துபாயில் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 19-வது லீக் ஆட்டத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கப்பிடல்ஸ் அணியும் மோதின.  

 முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்கள் எடுத்தது  பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்கள் எடுத்தது.  இதனால் போட்டியில், டெல்லி கப்பிடல்ஸ் அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா , ஷிகர் தவான் ஆகியோர்  களமிறங்கினர். அதிரடியாக துவங்கிய இந்த ஜோடியில் பிரித்வி ஷா 42(23) ஓட்டங்களும், ஷிகர் தவான் 32(28) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 11(13) ஓடங்களில் ஆட்ட்மிழந்தார்.

  ரிஷாப் பன், ஸ்டோய்னிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடியில் ஸ்டோய்னிஸ் 24 பந்துகளில் தனது அரைசத்தை பதிவு செய்து அசத்தினார். இந்த ஜோடியில் ரிஷாப் பன்ட் 37(25) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

  ஸ்டோய்னிஸ் 53(26) ஓட்டங்களும், ஹெட்மயர் 11(7) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 53 ஓட்ட்ங்கள் எடுத்தார். பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும், உதனா, மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதன்மூலம் பெங்களூரு அணிக்கு 197 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தேவ்தத் படிக்கல் (4), பின்ச் (13) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

கப்டன் கோஹ்லி (43), வில்லியர்ஸ் (9), மொயின் அலி (11), வாஷிங்டன் சுந்தர் (17), துபே (11), உடானா (1) மற்றும் சிராஜ் (5) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.  சைனி (12), சஹல் (0) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்கள் எடுத்தது.  இதனால் போட்டியில், டெல்லி கப்பிடல்ஸ் அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!