பாடும் நிலா மறைந்தது!

செப்டம்பர் 25, 2020

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பின்னர் வைரஸ் பாதிப்பில் இருந்து தேறி குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள், நடிகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பல துறைகளிலும் சாதனை படைத்தவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!