பாகிஸ்தானில் வசிக்கும் ஒரே ஒரு ஆண் யானை

செப்டம்பர் 6, 2020

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையில் உள்ள ஆண் யானை (காவன்) தான் தற்போது அந்நாட்டிலுள்ள ஒரே யானை. அதுவும் தற்போது உடல்நிலை பாதிப்பு அடைந்துள்ளது.

யானைகளே இல்லாத பாகிஸ்தானுக்கு 1985ம் ஆண்டில் ஒரு வயாதான காவன் என்றழைக்கப்பட்ட யானையை இலங்கை அன்பளிப்பாக வழங்கியது. அதற்கு துணையாக 1990ம் ஆண்டு சஹோலி என்ற பெண் யானையும் வழங்கப்பட்டது. இந்த இரண்டு யானைகளும் ஜோடியாக இஸ்லாமாபாத் மிருகக்காட்சிசாலையில் வாழந்து வந்த நிலையில் 2012ம் ஆண்டு சஹோலி உயிரிழந்தது.

அதற்குப் பிறகு தனிமையில் வாடிய காவன் விரக்தியுடன் காணப்பட்டு வந்தது. யானைகள் பொதுவாக மிதவெப்பநிலையில் வாழ்பவை. பாகிஸ்தானில் நிலவும் அதிக வெப்பநிலையால் காவனின் உடல் ஆரோக்கியம் பாதிப்பு அடைந்தது. 2015ம் ஆண்டுவாக்கில் அது மூர்க்கத்தனம் அடைந்தது. எனவே அதை சங்கிலியால் கட்டி வைத்தனர். தனிமை காரணமாக விரக்தியடைந்த யானை சுவரில் முட்டிக்கொண்டு நிற்பது போல புகைப்படம் வெளியாகி உலகெங்கும் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இப்புகைப்படம் ஏற்படுத்திய அதிர்வலையால் யானைய விடுவிக்க வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் எழுந்தது. புகழ்பெற்ற பாப் பாடகியான செர் கூட காவன் யானையை விடுவிக்க வேண்டும் அல்லது அதற்கு துணையாக பெண் யானையை அனுப்ப வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் யானையை விடுவிக்க வேண்டும் என நீதிபதிகள் மே மாதத்தில் தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து யானையை கம்போடியாவில் உள்ள சரணாலயத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சோர்வடைந்துள்ள யானையை மீட்க பாடல்களை கேட்கவைத்து நட்பை உருவாக்க தன்னார்வலர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!