தலைகீழாக தொங்கும் ரைசா

செப்டம்பர் 2, 2020

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா, தற்போது காட்டுக்குள் தலைகீழாக தொங்கு புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

  இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது இவரது நடிப்பில் திரில்லர் படம் ஒன்று உருவாகி வருகிறது.

கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இப்படத்தில் ரைசாவுடன், ஹரீஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். எமோசனலான த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தை ராஜ்சேகர் வர்மா தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ரைசா காயங்களுடன் காட்டுக்குள் தலைகீழாக தொங்கும்படியாக உருவாக்கப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு தி சேஸ் (The Chase) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!