கொரோனாவால் இலங்கையில் 4 இலட்சம் பேர் தொழில் இழப்பு – சஜித் m

ஆகஸ்ட் 25, 2020

கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமையால் நாட்டில் 4 இலட்சம் பேர் தமது தொழிலை இழந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பொரளைப் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் கொரோனா வைரஸ் நெருக்கடியால் வேலையிழந்த நான்கு இலட்சம் பேருக்கும் புதிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்போம். எவ்வாறாயினும் தற்போதைய அரசு  தொழில் இழந்தவர்களுக்காக புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!