ஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்

ஜூலை 11, 2020

ஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர், மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொண்ட போது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக அவர் அங்குள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்து வந்தவர், அமடோ கோன் கூலிபாலி (வயது 61). இவர் கடந்த 2012‍ஆம் ஆண்டு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்று இரண்டு மாதங்கள் சிகிச்சை செய்து கொண்டு சமீபத்தில் நாடு திரும்பினார்.

நேற்று முன்தினம் அவர் மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது.

வரும் ஒக்டோபர் மாதம் அந்த நாட்டில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளராக அமடோ போட்டியிட இருந்தார். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!